அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!

ajith

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. லைகா தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.  



இப்படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜித் ரசிகர்களுக்கு படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திடீரென  அஜித்தின் புகைப்படங்களை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்.


அந்த வகையில் நேற்று குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் இன்றும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்சி கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அஜித் ஸ்டைலிஸான லுக்கில் மாஸாக தோன்றியுள்ளார். 

Share this story