காதலனுடன் ஆட்டம் போடும் அதிதி.. வைரலாகும் வீடியோ

aditi rao hydari

 தனது காதலனுடன் நடிகை அதிதி ராவ் நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 

பாலிவுட்டில் பிசியான நடிகையாக இருப்பவர் அதிதி ராவ் ஹைதரி. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக மணிரதனனின் ‘செக்கக் சிவந்த வானம்’ படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதன்பிறகு தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் பெரிதாக நடிக்கவில்லை. 

aditi rao hydari

இதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளியில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘சைக்கோ’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்தார். அதேபோன்று விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

aditi rao hydari

இந்நிலையில் நடிகர் சித்தார்த்தை அதிதி ராவ் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அடிக்கடி ஒன்றாக வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் நடிகர் சித்தார்த்துடன் அதிதி ராவ் நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது அவர்களின் காதலை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. 


 

Share this story