பிரபல நடிகருடன் பிறந்தநாள் கொண்டாடும் அதிதி ராவ்.. யாருடன் தெரியுமா??

இன்று 36-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அதிதி ராவுக்கு, திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1986-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி ஐதராபாத்தில் பிறந்தவர் நடிகை அதிதி ராவ் ஹைடரி. இவர் பிறந்தது பிறந்தது ஹைதராபாத் என்றாலும் வளர்ந்தது என்னவோ டெல்லியில் தான். அதிதிக்கு 2வயது இருக்கும்போதே இவரது பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதால், தாயுடன் டெல்லிக்கு குடியேறி அங்கேயே வசித்து வந்தனர். கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த அதிதி ராவுக்கு, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரஜாபதி’ என்கிற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் தமிழில் ‘சிருங்காரம்’ என்னும் படத்தில் நடித்தார்.
பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அதிதி அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், அக்ஷய் குமார், அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் 10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் உதயநிதி உடன் சைக்கோ, துல்கர் சல்மான் உடன் ‘ஹே சினாமிகா’ என போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் அதிதி. கிஷோர் பாண்டு ரங்கன் இயக்கும் இந்தப்படம் ஒரு மவுன படம் என்று கூறப்படுகிறது. இவ்வாறாக படங்களில் பிசியாக இருந்துவரும் அதிதி, மறுபுறம் காதல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதிதியும், நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி வருகின்றன. இதனை இருவரும் உறுதிபடுத்தாவிட்டாலும், எங்கு சென்றாலும் ஜோடியாகவே சுற்றி வருகின்றனர். பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்குக்ம் இருவரும் ஒன்றாகவே வந்தனர். இன்று கூட தனது பிறந்தநாளை சென்னையில் சித்தார்த் உடன் தான் கொண்டாடி வருகிறாராம் அதிதி. தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடும் அதிதி ராவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.