டாக்டர் பணியை தொடங்கிய அதிதி ஷங்கர்

டாக்டர் பணியை தொடங்கிய அதிதி ஷங்கர்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அவர், குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகிவிட்டார். அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது. முதலில் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை அதிதி தனது மூன்றாவது படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  இந்த படத்தை ‌ அஜித்தின் பில்லா, பில்லா 2 உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார்.  ‌இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது‌. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

டாக்டர் பணியை தொடங்கிய அதிதி ஷங்கர்

இதனிடையே, மருத்துவருக்கு படித்துள்ள அதிதி ஷங்கர், டாக்டர் வேலையை செய்ய தொடங்கி இருக்கிறார். டாக்டர் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
அதிதி ஷங்கர் சென்னையில் ஒரு பிரபல மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிப்பை இரண்டு வருடங்களுக்கு முன்பு முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story