#AdithiShankar இணையத்தை தெறிக்க விடும் அதிதி ஷங்கர்!
1710580517963

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் நடிகை அதிதி.
இயக்குனர் முத்தையா இயக்கிய "விருமன்" திரைபடத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானார் அதிதி.

தனது முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்த அதிதி அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து நடிகர் விஜய் மகன் ஜேசன் விஜய் இயக்கம் திரைப்படத்தில் துரு விக்ரமிற்கு ஜோடியாக இவர் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோஷூட் எடுத்து வெளியிடுவது அதிதி யின் வழக்கம்.

அதேபோல் சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்ற அதிதி ஷங்கர் அங்கு எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்தார்.



அவர் பதிவு செய்த சில நிமிடங்களில் இருந்தே ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.