தெலுங்கில் அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர்...!

adhithi shankar

இயக்குநர் ஷங்கர் மகளான அதிதி ஷங்கர், கார்த்தியின் ‘விருமன்’ மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனிக்கப்பட்ட இவர், தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நாயகியாக நடித்தார். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள ‘நேசிப்பாயா’ படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். பெல்லம்கொண்டா சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை விஜய் கனகமெடலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

Share this story