அடுத்த படத்திற்கு தயார்! - வெளிநாடு பறந்த ‘அதிதி ஷங்கர்’.

photo

பிரபல இயக்குநரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் கதாநாயகியாக கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பு, கலக்கலான ஆட்டம், சொந்த குரலில் பாடல் என பலரின் கவனத்தை ஈர்த்தார். இரண்டாவது படமாக சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

photo

அதற்காக போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரிற்கு அதிதி ஷங்கர் படக்குழுவுடன் சென்றுள்ளார்.  அங்கு சுமார் ஒருமாத காலம் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story