சித் ஸ்ரீராம் பாடிய ‘வா செந்தாழினி’... ஜிவி பிரகாஷின் ‘அடியே’ வீடியோ பாடல் !

Adiyae

ஜிவி பிரகாஷின் ‘அடியே’ படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ‘வா செந்தாழினி’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அடியே’.   ஜிவி பிரகாஷ் படத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Adiyae

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடிய ‘வா செந்தாழினி’ என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மனதை வருடும் இந்த பாடலை பாகவதி எழுதியுள்ளார். இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 

Adiyae

'திட்டம் இரண்டு' படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. 96' பட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கெளரி கிஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். டைம் டிராவல் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகி வரும் இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story