மனதை வருடும் ‘வா செந்தாழினி’ ... ‘அடியே’ படத்தின் வீடியோ பாடல் ப்ரோமோ வெளியீடு !

Adiyae

 ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடியே’ படத்தின் வீடியோ பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

'திட்டம் இரண்டு' படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அடியே’. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். டைம் டிராவல் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகி வரும் இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Adiyae

  ஜிவி பிரகாஷ் படத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். '96' பட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கெளரி கிஷன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

Adiyae

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து ‘வா செந்தாழினி’ என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மனதை வருடும் இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாகவதி எழுதிய இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலின் முழு வீடியோ நாளை மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story