ஜி.வி பிரகாஷின் ‘அடியே’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.

photo

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘அடியே’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

photo

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'அடியே'. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.  படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை  பெற்ற இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது அதன்படி  படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Share this story