ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அடியே படக்குழு

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அடியே படக்குழு

கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான அடியே படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், படக்குழு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'அடியே'. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரைப்படம் ஓடி வருகிறது.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அடியே படக்குழு

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அடியே படக்குழு

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினரின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பிரபு, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், நாயகன் ஜீ.வி. பிரகாஷ் குமார், நாயகி கௌரி ஜி. கிஷன், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். 
 

Share this story