கணவருடன் விவகாரத்து..? வதந்திக்கு நடிகை பாவனா மறுப்பு...!
1742626284370

கணவரை பிரிந்ததாக வந்த வதந்திக்கு நடிகை பாவனா மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகை பாவனா, மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபகாலமாகத் தனது கணவர் குறித்து தனது சமூக வலைதளத்தில் எந்தப் பதிவையும் அவர் வெளியிடவில்லை. இதனால் அவர் கணவரைப் பிரிவதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில் அதை மறுத்துள்ள பாவனா, “அதில் எந்த உண்மையும் இல்லை, சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற கதைகளை உருவாக்குகிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பகிர்வது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் எனது கணவருடன் நான் இருக்கும் புகைப்படங்களை வெளியிடவில்லை. எனது திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.