13 வருட காதல்... காதலரை அறிமுகப்படுத்திய நடிகர் அர்ஜுனின் 2வது மகள்...

நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள், தனது 13 வருட காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். மேலும், இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார்.
இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். இதில் அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் இவருக்கும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. மேலும், அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா. இவருக்கு திருமணம் நடக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 13 வருடங்களாக காதலித்து வரும் காதலர் புகைப்படத்தை அஞ்சனா தற்போது வெளியிட்டுள்ளார். இத்தாலியில் மொத்த குடும்பமும் இருக்கும்போது அவர்கள் நிச்சயம் நடைபெற்று இருக்கிறது. இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.