மீண்டும் ஆன்மீக பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த்.. விரைவில் இமயமலைக்கு செல்கிறார்

rajinikanth

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 'அண்ணாத்த' படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

rajinikanth

பொதுவாக தனது ஒவ்வொரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் நடிகர் ரஜினி இமயமலைக்கு செல்வது வழக்கம். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கத்தை வைத்துள்ள நிலையில்  இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவு மற்றும் கொரானா பிரச்சினை காரணமாக இமயமலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். 

இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்லவுள்ளார். அங்கு 7 நாட்கள் ஆன்மீக சுற்றுலா பயணம் செல்லவுள்ள ரஜினி, அங்குள்ள பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவுள்ளார். இதற்கிடையே சமீபத்தில் மாலத்தீவு சென்ற ரஜினிகாந்த, நேற்றுதான் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story