'ஜெயிலர் 2' படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் படம்.. ஹீரோ இந்த பிரபல நடிகரா?

nelson

சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர் ’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.’ஜெயிலர் 2’ படத்தின் திரைக்கதை எழுதும் பணியை கிட்டத்தட்ட நெல்சன் முடித்து விட்டதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில், நெல்சன் இயக்க இருக்கும் இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

junior NTR

’ஜெயிலர் 2’ படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார் என செய்தி கசிந்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆரிடம் நெல்சன் கூறிய கதை ஓகே ஆனதை அடுத்து விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.நெல்சன் ஸ்டைலில் உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிலும், ஜூனியர் ஜூனியர் என்.டி.ஆருடன் நெல்சன் கைகோர்க்க உள்ளதால், இந்த படம் நிச்சயம் தென்னிந்திய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share this story