கைதிக்குப் பிறகு மெய்யழகன் படத்தில் தான்.. சர்ப்ரைஸ் உடைத்த கார்த்தி..!

karthi

தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டு சித்தப்பா, அத்தை, மாமா என உறவுகளையே மறந்து விடுகிறோம். அதனை ஞாபகப்படுத்தும் படமாக மெய்யழகன் இருக்கும் என படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசினார். 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், நடிகர்கள் கார்த்தி - அரவிந்த் சாமி நடித்துள்ள படம் மெய்யழகன். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, இயக்குநர் பிரேம்குமார், நடிகை ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இப்படத்தில் இருந்து ஏறுகோள் காணிக்கை என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

null




மேடையில் பேசிய நடிகர் கார்த்தி, "96 படத்தை முடித்துவிட்டு ஆறு வருடம் இந்த படத்திற்காக பிரேம்குமார் காத்திருக்கிறார். பிரேம்குமார் எனக்காக ஒரு கதை எழுதிவிட்டு என்னிடம் பேச தயங்கிக் கொண்டிருக்கிறார் என கேள்விப்பட்டதும், நானே அவரை அழைத்து பேசுவோமா என கேட்டேன். என்னைப் பார்க்க வந்தவர், ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து படிக்கச் சொன்னார். அதை படிக்க படிக்க அழுதுவிட்டேன்.

கைதிக்குப் பிறகு அதிக நேரம் இரவில் படமாக்கப்பட்ட படம் மெய்யழகன். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிற இரண்டு பேர் பேசுகிற விஷயம் தான் இந்தப் படம். இதில் பாட்டு, சண்டை இல்லை. அதனை எதிர்பார்த்து இந்த படத்துக்கு வராதீர்கள். இனிமேல் சொந்த ஊருக்குச் செல்லும் ஒவ்வொருவரும் மெய்யழகன் பட பாடலைக் கேட்டு தான் செல்வார்கள்.
மேலும், படத்தில் வரும் ஒரு முக்கியமான இடத்தில் கமல்ஹாசன் பாடி உள்ளார், அவருக்கு நன்றி. தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டு சித்தப்பா, அத்தை, மாமா என உறவுகளையே மறந்து விடுகிறோம். அதனை ஞாபகப்படுத்தும் படமாக மெய்யழகன் இருக்கும்" என்று பேசினார்.

Share this story