மீண்டும் தரமான செய்கைக்கு தயாரான ‘ராட்சசன்’ கூட்டணி.

photo

நொடிக்கு நொடி பரபரப்பை கூட்டி, முகத்தில் பயம் அப்பிக்கொள்ள பார்வையாளர்களை இருக்கையின் நுணியில் அமரவைத்த சைக்கோ திரில்லர் திரைப்படம்தான் ‘ராட்சசன்’. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ராம் குமார் இயக்கியிருந்தார். படத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால், காளிவெங்கட் , முனிஷ்காந்த் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இதற்கு முன் இந்த கூட்டணி காமெடி கதைக்களத்தில் தயாரான ‘முண்டாசுபட்டி’ படத்தை இயக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ராட்சசன் படத்தை தொடர்ந்து மீண்டும் காதல், காமெடி கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை சத்தியஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கின்றனர். படத்திற்கு ஹீரோ, இயக்குநர் ஓகே ஆன நிலையில் விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

photo

Share this story