விடாது கருப்பு ‘ராஷ்மிகா’வை விடாமல் துரத்தும் டீப் ஃபேக்!...

photo

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

photo

காலத்திற்கேற்ப அப்டேட்டாகிவரும் இந்த உலகத்தில் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்டாக உள்ளது செயற்கை நுண்ண்றிவு எனப்படும் AI தொழில்நுட்பம்தான். இதன் மூலமாக புகைப்படம், வீடியோ, குரல்  ஆகியவற்றை வசதிக்கேற்ப மார்பிங் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஆனால் அதனை  சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். நடிகைகளின் முகங்களை சில ஆபாச வீடியோக்களுடன் இணைத்து, ஆபாச வீடியோ வெளியிடுகின்றனர். அதில் முதலாவதாக சிக்கியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா, அடுத்து கத்ரீனா கைஃப், ஆல்யாபட் ஆகியோர் ஆவர்.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள் மீண்டும் ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்ட நிரந்தர தீர்வு கொண்டு வரவேண்டும் என கூறிவருகின்றனர்.  

Share this story