சாம் சிஎஸ்ஸின் கர்ஜிக்கும் குரலில் ‘துரோகம்’ பாடல்.. ‘அகிலன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் மாறுப்பட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’. துறைமுகத்தில் நடக்கும் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். தமிழகத்தில் சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் வெளியிடும் இப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவி ஆன்ட்டி ஹீரோவாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர் போலீசாக நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்காக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். . தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
சாம் சிஎஸ் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. அதில் முதல் பாடலான துரோகம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை சாம் சிஎஸ் மற்றும் சிவம் இணைந்து பாடியுள்ளனர். மிரட்டலாக உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.