ஜெயம்ரவியின் “அகிலன்” திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு.

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் “அகிலன்” இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். இவருடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், தான்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் படம் முழுவதும் துறைமுகத்தில் படமாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. படக்குழு எவ்வளவு சிரமப்பட்டு படத்தை தயாரித்துள்ளனர் என தெரிகிறது.
இந்த படத்தின் பிரியா பவானி ஷங்கர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்த நிலையில், இந்த மேக்கிங் வீடியோவும் எதிர்பார்பை கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.