‘STR 50’ படத் தயாரிப்பில் இணையும் ஏஜிஎஸ் நிறுவனம்

simbu

‘எஸ்.டி.ஆர் 50’ படத்தினை சிம்புவுடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது.

சிம்புவின் பிறந்த நாளன்று அவரது 50-வது படம் அறிவிக்கப்பட்டது. அதனை தேசிங்கு பெரியசாமி இயக்க, அட்மேன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் சிம்புவே தயாரிக்க உள்ளார் என தெரிவித்தார்கள். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இணைந்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.

str
அட்மேன் சினி கிரியேஷன்ஸ் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் இந்த தயாரிப்பு நடைபெறௌள்ளது. ‘எஸ்.டி.ஆர் 50’ படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிய உள்ளனர். இப்படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

‘எஸ்.டி.ஆர் 50’ ப்ரோமோ படப்பிடிப்பு முடிந்தவுடன் முழுமையாக தலைமுடியை சிம்பு குறைக்க உள்ளார். அதன்பின் ‘எஸ்.டி.ஆர் 49’ படப்பிடிப்பை அவர் முடிக்கவுள்ளார். அதற்குப் பின் மீண்டும் முடி வளர்த்து ‘எஸ்.டி.ஆர் 50’ படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் சிம்பு. அவரது 50 மற்றும் 51 ஆகிய இரண்டு படங்களையுமே ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story