ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ஹீரோ விஷ்ணு விஷால்.. அப்போ ரஜினி??

 lal salam


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.  

தனுஷ் நடித்த `3' திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் ஜஸ்வர்யா.  அந்தப் படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக்- பிரியா ஆனந்த் நடிப்பில் `வை ராஜா வை' என்ற திரைப்படத்தை இயக்கினார்.  பின்னர் அவர் இயக்கிய  `சினிமா வீரன்' என்கிற ஆவண திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து நீண்ட  இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லைகா  நிறுவனத் தயாரிப்பில்  புதிய படத்தை இயக்குகிறார். 

 lal salam

இந்தப்படத்தில் ரஜினி நடிக்க  உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. இந்த நிலையில்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும்  விக்ராந்த் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.  'லால் சலாம்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.  இதில்  சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால்  இந்த படத்தில்  ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில்  நடிக்கிறார். 

lal salam

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு பணிகளையும், பிரவீன் பாஸ்கர் எடிட்டிங் பணிகளையும் செய்கின்ற்னர்.  இந்த திரைப்படத்திற்கான பூஜை இன்று  சென்னையில் நடைபெறுகிறது. அதில் லைகா நிறுவனர்  சுபாஸ்கரன், நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்கின்றனர். 

Share this story