ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கும் புதிய பீரியட் வெப்தொடர் - வெளியான அப்டேட்

aishwarya lakshmi

ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். மேலும் இவர் தெலுங்கிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கொத்தா திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான பொன் ஒன்று கண்டேன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.அடுத்ததாக இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் ஐஸ்வர்யா லட்சுமி புதிய வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

aishwarya lakshmi

இதனை அறிமுக இயக்குனர் மோசு என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றியாவார். இந்த வெப் தொடருக்கு `தீவினை போற்று' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு 40 நாட்களாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. தற்பொழுது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் பொள்ளாச்சியில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடர் 1990-களில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. இதனை யாழி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்தொடரில் ஐஷ்வர்யா லட்சுமியுடன் இணைந்து சத்யராஜ், பாரதிராஜா மற்றும் பாபு ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'தீவினை போற்று' வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story