“ஒரு பெண் மீது நான் கொண்ட காதல்”... இணையத்தை கவர்ந்த ஐஸ்வர்யா மேனனின் ட்வீட் !

aiswarya meon

தீபிகா படுகோனேவுடன் நடிகை ஐஸ்வர்யா மேனன் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தை கவர்ந்துள்ளது. 

கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் சொதுப்புவது எப்படி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பிறகு ‘ஆப்பிள் பெண்ணே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  

aiswarya meon

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் நிகில் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்பை’ படத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று ‘வலிமை‘ படத்தின் வில்லன் கார்த்திகேயா நடிப்பில் உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன், பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ‘பிரொஜக்ட் கே’ படத்திற்காக ஐதராபாத் வந்துள்ள பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு "The moment I fell in love with a woman @deepikapadukone all I can say is I love you" என்ற கேப்ஷனுடன் ஒரு பெண் மீது காதல் கொண்ட தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Share this story