டால்பினுடன் டான்ஸ் ஆடும் ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’ -வைரல் வீடியோ.

photo

பெண்மைய்ய கதாபாத்திரங்களை அதிகம் ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்கும் பிரபலங்களுள் முக்கியமானவர் இவர். வடசென்னை, கனா, அட்டகத்தி, காக்கா முட்டை, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்கள் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன. தமிழ் மொழியை கடந்து மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா, சமூகவலைதளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது டால்பினுடன் டான்ஸ் ஆடும் வீடியோவே வெளியிட்டுள்ளார்.

அதில் டால்பின் அருகில் நின்றுகொண்டு செம குஷியாக நடனமாடுகிறார், அவருடன் இணைந்து அந்த டால்பினும் நடனமாடுகிறது. அதுமட்டுமல்லமல் டால்பினுக்கு மீனை உணவாக அளிக்கிறார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கு புகழ்பெற்ற  மெல்போர்ன் ஸ்டேடியத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம், ஆஸ்திரேலிய நகரை ரசிக்கும் புகைப்படம் என பல அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள்  மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.

Share this story