ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்திற்கு தடையா ?.. தமிழில் கிளப்பியுள்ள எதிர்ப்பு !

farhana

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழில் வெளியான ‘ஃபர்ஹானா’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளப்பியுள்ளது.  

மலையாளத்தில் உருவான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு மதத்தை மட்டும் புன்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதனால் தென்னிந்தியாவில் இந்த படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. 

farhana

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தொடர்ந்து தமிழகத்தில் இன்று வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்திற்கும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. இஸ்லாமியா பெண்கள் படும் இன்னல்கள் குறித்தும், அவர்களது உரிமைகள் குறித்தும் பேசும் இந்த படத்திற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. 

farhana

தங்களது மதத்தை புன்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். திருவாரூரில் இன்று பிரபல திரையரங்கில் வெளியான இப்படத்திற்கு தமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் பதற்றமாக நிலை ஏற்பட்டுள்ளது. 

Share this story