ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு தடை.. என்ன காரணம் தெரியுமா?
1721745034000
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார்.இவர் மலையாளத்தில் அஜயந்தே ரண்டம் மோஷனம் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர ஜித்தின் லால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். இவர் தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அஜயந்தே ரண்டம் மோஷனம் படத்தை திரைக்கு கொண்டுவர பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் என்பவர் இந்த படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் படத்தை தயாரிக்க தன்னிடம் ரூ. 3.20 கோடி பெற்று ஏமாற்றிவிட்டனர். எனவே படத்தை வெளியிட கூடாது என்று வழக்கில் தெரிவித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்திற்கு தடை வித்துள்ளது.