டார்க் காமெடி படத்தில் ‘சொப்பனசுந்தரி‘-ஆக ஐஸ்வர்யா ராஜேஷ்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !

SoppanaSundari

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நடித்து முடித்தள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.  டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை  ‘லாக்கப்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். 

SoppanaSundari

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மை கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். 

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு போஸ்டராக வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story