ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’... ரிலீஸ் குறித்த அறிவிப்பு !

SoppanaSundari
 ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த படத்தை ‘லாக்கப்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கி வருகிறார். டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

SoppanaSundari

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மை கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

SoppanaSundari

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது இறுதிக்ககட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story