உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்….- கொடியசைத்து துவங்கி வைத்த நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், சந்தோஷ் பிரதாப்.

photo

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கு திட்டத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

photo

இந்தியா தன்னிறைவு அடைந்துவிட்டது என கூறினாலும். இன்றும் நாட்டில் உணவில்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை அதிகமாகதான் உள்ளது. அதனை குறைக்கவே திரு.ஆலன் அவர்களால் ஹெல்ப் ஆன் ஹங்கர் என்ற தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் துவங்கப்பட்டு நான்கு  ஆண்டுகள் ஆகும் நிலையில் வருடாவருடம் உலக உணவு தினத்தன்று பிரியாணி சமைத்து உணவில்லாதவர்களுக்கு வழங்கு நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் சுமார் 5000 நபர்களுக்கு பிரியாணி சமைத்து 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்களால் வழங்கப்படுகிறது.

photo

அந்த நிகழ்வை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை சனம் ஷெட்டி, அடையாறு காவல் உதவி ஆணையர் திரு. நெல்சன், துணை ஆட்சியர் திருமதி. ப்ரீத்தி பார்கவி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

Share this story