விசாரணை வளையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ... நடப்பது என்ன ?

aishwarya rajinikanth house theft

 நகை காணாமல் போன வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனக்கு சொந்தமான விலை உயர்ந்த் நகைகளை தனது வீட்டு லாக்கரில் வைத்திருந்தார். ஆனால் கடந்த மாதம் பார்த்தபோது நகைகள் காணவில்லை. அதனால் தேனாம்பேட்டை காவல்நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண் ஈஸ்வரி, ஓட்டுனர் வெங்கடேசன் உள்ளிட்ட மூவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். 

aishwarya rajinikanth house theft

இந்த வழக்கை விசாரித்து வந்த போலீசார், பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு திருடிய நகைகளை வைத்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை ஈஸ்வரி வாங்கியிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர ஐஸ்வர்யாவின் பினாமி நான் தான் என்றும், அதனால் என்னுடைய பெயரில் வீட்டை வாங்கியிருப்பதாகவும் என்று தனது கணவரிடம் ஈஸ்வரி கூறியிருக்கிறார். 

aishwarya rajinikanth house theft

இந்நிலையில் திருடுப்போன நகைகளை விட அதிகமான நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனால் போலீசாரின் சந்தேக பார்வை ஐஸ்வர்யா மீது திரும்பியுள்ள நிலையில் அவரிடமும் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

 

Share this story