திருத்தணி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான லால் சலாம் திரைப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தானே தயாரித்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் முழுக்க முழுக்க இளம் நடிகர்கள் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் சிறப்பாக வர வேண்டும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோவில்களில் வழிபாடு நடித்தி வருகிறார்.
அந்த வகையில், நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது தான் இயக்க உள்ள புதிய படத்தின் கதையை முருகன் திருவடியில் வைத்து சாமி தரிசனம் செய்தார்.