மகன்களுடன் சாமி கும்பிட்டு விருந்து வைத்த ‘ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’.

தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடந்து கௌதம் கார்த்திகின் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற தவறியது. இதனால் படங்கள் இயக்குவதற்கு சிறிது இடைவேளை விட்டு,விட்டு ஆல்பம் பாடல்களை இயக்கினார், சமீபத்தில் கூட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய முசாபிர் ஆல்பம் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமது மகன்களுடன் சாமி கும்பிட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் தனது நண்பர்கள் மற்றும் லால் சலாம் படத்தில் பணிபுரியும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருந்து வைத்து அந்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.