ரஜினி வீட்டில் அடுத்த ஹீரோ தயார்! – கியூட் கிளிக்ஸ்.

photo

கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து இவர்கள் தங்களது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுக்காக ஒன்றாக சேர வேண்டும் என பலரும் விரும்பினர்.  யாத்ரா, லிங்கா இருவரும் ஐஸ்வர்யாவுடன் இருந்தாலும் தனுஷுடன் நிறைய சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். இருவரும் தங்கள் குழந்தைகள் மீது அதீத அக்கறை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

photo

தனது மகன் அதற்குள் இப்படி வளர்ந்துவிட்டான் பாருங்கள் என அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. இந்த படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த பலருமே ரஜினிகாந்தின் குடும்பத்தில் அடுத்த ஹீரோ தயார், என கமெண்ட் செய்து வருகின்றனர். பார்ப்பதற்கு அச்சு அசல் தனுஷ் போன்றை அவது பெரிய மகன் உள்ளார்.  ஐஸ்வர்யா தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த கேமியோ ரோலில் நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

 

Share this story