தெலுங்கு சினிமா பக்கம் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் -எதனால் தெரியுமா ?
1776393003000
தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு படமும் தமிழில் ‘தீயவர் குலை நடுங்க’ என்ற 2 படம் மட்டுமே வெளியானது. தற்போது ‘கருப்பர் நகரம்’, ‘மோகன்தாஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர் ‘கனா’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘தர்மதுரை’, ‘வடசென்னை’, ‘ரம்மி’ போன்ற படங்களில் முதன்மை வேடங்களில் நடித்தார். பின்னர் ‘பர்ஹானா’, ‘பூமிகா’, ‘திட்டம் இரண்டு’, ‘டிரைவர் ஜமுனா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்க தொடங்கினார். பிறகு புதிய பட வாய்ப்புகள் அவருக்கு குறையத்தொடங்கியது. அதற்கு சில ஹீரோக்களின் புறக்கணிப்பு தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக அவர் நடித்த ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ என்ற படத்தின் மாபெறும் வெற்றியால் தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்த ‘ஓ சுகுமாரி’ என்ற படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. பரத் தர்ஷன் இயக்கும் இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதன் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் தனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.