ஐஸ்வர்யா ராஜேஷின் 'ரன் பேபி ரன்'... பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் தீம் வெளியீடு !

run baby run

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ரன் பேபி ரன்' படத்தின் ஸ்பெஷல் தீம் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ரன் பேபி ரன்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

run baby run

மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா‌ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷமன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.

run baby run

டார்க் த்ரில்லர் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் தீம் மியூசிக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த தீம் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story