அட்டகாசமாக தொடங்கிய 'லால்சலாம்' ஷூட்டிங்... ரஜினி பங்கேற்கிறாரா ?

lalsalaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டு செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது மூன்றாவதாக 'லால்சலாம்' என்ற படத்தை இயக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார். 

lalsalaam

இந்த படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக என்ற சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இந்த படம் உருவாகவுள்ளது. ‘லால்சலாம்’ படம் பூஜையுடன் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.

lalsalaam

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 'ஜெயிலர்' படத்தை முடித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. 

Share this story