காரை வைத்து காமெடியில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’... ஐஸ்வர்யா ராஜேஷ் பட டிரெய்லர் வெளியீடு !

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் அவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மை கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தை ‘லாக்கப்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கி வருகிறார். டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தின் இறுதிக்ககட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு காரை மையமாக வைத்து காமெடியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Watch the official trailer for #SoppanaSundari now and join the fun with the amazing @aishu_dil!
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 2, 2023
WATCH NOW ???? https://t.co/HAXEJaC1TY@ahimsafilms @Hamsinient @HueboxStudios pic.twitter.com/7Q1hUvkWZ3