இஸ்லாமிய பெண் குறித்து பேசும் 'ஃப்ர்ஹானா'... ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான நடிப்பில் உருவான டீசர் !

ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள ஃபர்ஹானா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஃப்ர்ஹானா'.
இந்த படத்தை 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' ஆகிய வித்தியாசமான படங்கள் மூலமாக மக்களை ஈர்த்த இயக்குனர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர்களுடன் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. வரும் மே 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் இஸ்லாமிய பெண் உரிமை குறித்து பேசும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.