நாளை வெளியாகும் ‘லால் சலாம்’ வெறித்தனமான அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

lal salaam
‘லால் சலாம்’ படத்தின் முக்கியமான அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.  இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

lal salaam

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்து வருகிறார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

lal salaam

இதையடுத்து இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கியுள்ளது. இதில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story