செந்திலை தொடர்ந்து இணையும் பிரபல நடிகர்.. ‘லால் சலாம்’ முக்கிய அப்டேட்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் அவர் இணைவார் என கூறப்படுகிறது. நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் செந்தில் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் செந்திலை தொடர்ந்து தம்பி ராமையா இணைந்துள்ளார். அவர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அடுத்தடுத்து முக்கிய நடிகர்கள் இணைவது படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.