கோப்ரா பட தோல்வி... மனம் திறந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து..!

ajay gyanamuthu

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமான்டி காலனி 1 படத்தின் அடுத்த பாகமாக உருவாகியுள்ள படம் டிமான்டி காலனி 2.  இப்படத்தில் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஒரு நேர்காணலில் கோப்ரா பட தோல்வி குறித்து பேசியுள்ளார். அஜய் ஞானமுத்து மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘கோப்ரா’. அதில், விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்து இருந்தார் . ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கோப்ரா படம் ஓடவில்லை. இதுகுறித்து பேசிய இயக்குனர் அஜய் ஞானமுத்து, படத்தின் கதையை தயாரிப்பு நிறுவனம் மாற்றியதாகவும், அதற்கு தான் ஒப்புக்கொண்டது தான் என் வாழ்வில் நான் செய்த விலை மதிக்க முடியாத தவறு எனவும் வேதனையுடன் கூறி உள்ளார்.

Share this story