அஜித்தின் 64 வது படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகைகள் பட்டியல்

ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அவர் நடித்த ‘குட் பேட் அக்லி’ என்ற படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது அவர் முழு நேர கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்குமாரின் 64வது படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் அல்லது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அஜித்குமாரின் சம்பள பிரச்னையால் அந்நிறுவனங்கள் அப்படத்தை தயாரிப்பதில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதில் எந்தவித மாற்றமும் இல்லையாம். ஆனால் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அந்த படத்தை அஜித்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளதாகவும், மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் மற்றும் ஸ்ரீலீலா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இனிமேல் மாதத்தில் 15 நாட்கள் கார் ரேஸிலும், 15 நாட்கள் படப்பிடிப்பிலும் அஜித்குமார் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

Share this story