அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி உறுதி

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி உறுதி

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகை த்ரிஷாவும் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது, ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதிதான் என்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவே சொன்னதாகக் கூறப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் இணைய உள்ளார். 

Share this story