நாளை அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு.. கொண்டாட தயாராகும் ரசிகர்கள் !
அஜித் மற்றும் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.
அஜித் திரைப்படங்கள் என்றாலே அது ரசிகர்களிடையே தனி கவனம் பெறும். அதிலும் அஜித் படத்தின் அப்டேட்டுக்காக வெயிட் பண்ணுவது ரசிகர்களுக்கு வாடிக்கையான ஒன்று. ஏற்கனவே ‘வலிமை’ படத்திற்காக ஏகப்பட்ட அலப்பறைகளை ரசிகர்கள் கொடுத்து வந்தனர். கடைசியாக அப்டேட்டுகளை வரிசையாக கொடுத்து ரசிகர்களை படக்குழு குஷிப்படுத்தியது.
அந்த வகையில் அஜித்தின் ‘ஏகே 61’ படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது. அதில் முதலில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளார். அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

