அஜித்திற்கு ஜோடியாகும் முன்னாள் உலக அழகி... 'ஏகே 62' முக்கிய அப்டேட்

ak62

 அஜித்தின் 62வது படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எச் வினோத் இயக்கத்தில் நடிகர்‌ அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு  ‌ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படம் அடுத்த வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். பிரபல இயக்குனராக கௌதம் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு துவங்கவுள்ளது.

இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ஏற்கனவே இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' படத்தில் அஜித்துடன் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story