அதிரடியாக தொடங்கிய ‘AK 62‘... அஜித் - மகிழ் திருமேனி படத்தின் முக்கிய அப்டேட்

ajith and magizh thirumeni

அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் புதிய படம் நேற்று பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக படத்தை தயாரிக்கும் லைக்கா அறிவித்தது. அதன்பிறகு இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் ஆறு மாதம் நடைபெற்ற நிலையில் கதையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தியில்லாததால் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். 

ajith and magizh thirumeni

இதையடுத்து அஜித்தின் படத்தை யார் இயக்குகிறார் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமேனி, அட்லி, விஷ்ணு வரதன், வெங்கட் பிரபு, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. ஆனால் கடைசியாக இந்த படத்தை ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவது உறுதியானது.  தகவல் வெளியானது. அவர் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்ததால் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. 

ajith and magizh thirumeni

இந்நிலையில் அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி சத்தமில்லாமல் நேற்று நடைபெற்றுள்ளது. அனிரூத் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக நம்ப தகுந்த தகவல்கள் கசிந்துள்ளது. 

 

Share this story