அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி உறுதி... ஆனா இன்னொரு ட்விஸ்ட் இருக்கு !

ak 62

 அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் ‘ஏகே 62’ படம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு பிறகு எந்த இயக்குனரின் படத்தில் நடிகர் அஜித் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைப்பதாக கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டுவிட்டது. 

ak 62

ஆனால் கடந்த ஆறு மாதமாக பணிகள் நடைபெற்ற வந்த இந்த படத்தின் கதை அஜித்திற்கு பிடிக்கவில்லை. அதனால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருக்கிறார். அதனால் ‘ஏகே 62’ படத்தை தடம், கலகத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. 

ak 62

அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியின் படம் கிட்டதட்ட உறுதி என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையை சொல்ல சமீபத்தில் அவர் லண்டன் சென்றதாகவும், 50 லட்சம் அட்வான்ஸ் தொகை பெற்றிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இன்னொரு ட்விஸ்ட்டாக மகிழ் திருமேனியுடன் இன்னொரு இயக்குனரும் இணைந்துள்ளாராம். அதாவது பிரபல இயக்குனரின் கதை தான் ‘ஏகே 62’ படமாக உருவாகிறது. திரைக்கதை மற்றும் இயக்கத்தை மட்டும் தான் மகிழ் திருமேனி கவனிக்கவுள்ளாராம். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவுள்ளதாம்.

Share this story