மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி..?

ajith

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும்  அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் நேற்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.GUB


இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகிய இயக்குநர்களுடன் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இப்படியான சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் மீண்டும் அஜித் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story