5வது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைக்கும் அஜித் !

ak 63

 5வது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் அஜித், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ‘தடையறத் தாக்க’, ‘தடம்’, ‘கலகத்தலைவன்‘ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இந்த படத்தை ஆரம்பிக்கும் பணிகளை வேகமாக இயக்குனர் மகிழ் திருமேனி செய்து வருகிறார். 

ak 63

லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனியின் திரைப்படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெற்றிப்பெற்றதால் இந்த படமும் சூப்பர் ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். 

ak 63

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ‘கங்குவா’ படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ளார். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி 5வது முறையாக இணையவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

Share this story